திருப்பத்தூர் மாவட்டம் பெரியாகரம், சக்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (42). இவரது மகன் விக்னேஷ் (18) கஞ்சா, மதுபோதைக்கு அடிமையாகி அடிக்கடி குடும்பத்தினரிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார்.
இந்நிலையில் வழக்கம்போல் இன்றும், விக்னேஷ் போதையில் பணம் கேட்டு தந்தையிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தந்தை, மகனை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார்.