தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பத்தூரில் 6 இடங்குகளில் மினி கிளினிக்குகள் தொடக்கம் - minister kc veeramani launch mini clinic

திருப்பத்தூரில் 6 இடங்களில் அம்மா மினி கிளினிக்குகளை அமைச்சர் கே.சி வீரமணி மற்றும் அமைச்சர் நிலோபர் கபில் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

மினி கிளினிக்குகள் தொடங்கி வைப்பு
மினி கிளினிக்குகள் தொடங்கி வைப்பு

By

Published : Dec 17, 2020, 4:19 PM IST

அம்மா மினி கிளினிக் திட்டம்

திருப்பத்தூர் : ஜோலார்பேட்டை அருகே இடையபட்டி, பொன்னேரி உள்ளிட்ட 6 இடங்களில் வணிகவரி அமைச்சர் கே.சி வீரமணி மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் ஆகியோர் அம்மா மினி கிளினிக் சேவையை இன்று (டிச.17) தொடங்கிவைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.சி. வீரமணி, “தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ள 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக்குகள் மூலம் சாதாரண நோய்களுக்கு மருத்துவம் பார்க்கப்படும். மேல் சிகிச்சை அளிக்க வேண்டியபட்சத்தில் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுவார்கள்.

திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூரை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் முதல்கட்டமாக 106 மினி கிளினிக்குகள் தொடங்கப்படுகின்றன.

நிகழ்வின்போது..

அரசு மருத்துவமனைகளின் தரம்

இதன் மூலம் மருத்துவமனைகள் இல்லாத கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை, எளியோருக்கு உடனடி சிகிச்சை கிடைக்கப்பெறும். தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகள் தனியார் மருத்துவமனைக்கு ஈடாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

திருப்பத்தூர் மாவட்டத்தில் விரைவில் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி தொடங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மினி கிளினிக்குகள் தொடங்கி வைப்பு

மருத்துவத் துறைக்கு முக்கியத்துவம்

தமிழ்நாடு அரசு ஏழை மக்களின் நலன் கருதி மருத்துவத்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. ஒரு ஆண்டுக்குள் 11 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பதால் இனிவரும் காலங்களில் ஏழை மாணவர்களும் மருத்துவம் பயில முடியும்”என்றார்.

தொடர்ந்து பேசிய அவர்,”கிராமங்களில் உள்ள ஏழை எளிய மக்கள் மாதத்திற்கு 60 லட்சம் பேரும், ஓராண்டுக்கு 7 கோடி பேரும் சிகிச்சை பெற்று பயனடைவார்கள் என மருத்துவத்துறையினர் கூறுவதாகவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் சுமார் 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு பாதுகாப்பு பெட்டகத்தை அமைச்சர்கள் வழங்கினார்கள். இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் சிவனருள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: மருத்துவ கல்லூரிகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழக்கு: மத்திய, மாநில அரசு பதிலளிக்க உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details