தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜோலார்பேட்டை: அமைச்சர் கே.சி. வீரமணி 3ஆவது முறையாக வேட்புமனு தாக்கல்

திருப்பத்தூர்: மூன்றாவது முறையாக ஜோலார்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி வேட்புமனு தாக்கல்செய்தார்.

Minister veermani
Minister veermani

By

Published : Mar 15, 2021, 8:09 PM IST

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை தொகுதிக்கு அதிமுகவின் வேட்பாளராகப் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி அறிவிக்கப்பட்டார்.

ஜோலார்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கு இன்று (மார்ச் 15) அதிமுக வேட்பாளராகப் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி நாட்றம்பள்ளியில் உள்ள பழைய பேருந்து நிலையத்தில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து அங்கிருந்து நடந்துசென்று வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் லக்ஷ்மியிடம் வேட்புமனு தாக்கல்செய்தார்.

அமைச்சர் கே.சி. வீரமணி வேட்புமனு தாக்கல்
இவர் ஏற்கனவே இரண்டு முறை அதிமுகவில் ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று பல்வேறு துறைகளில் அமைச்சராக இருந்துள்ளார்.
தற்போது மூன்றாவது முறையாகப் போட்டியிட மனு தாக்கல்செய்துள்ளார். இவருக்கு மாற்று வேட்பாளராக பெருமாள் கோயில் தெரு தாமலேரி முத்தூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் வேட்பு மனு தாக்கல்செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details