தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பத்தூர் மாவட்ட கரோனா நோய்த் தடுப்புப் பணியாளர்களுக்கு பாராட்டு: அமைச்சர் கே.சி வீரமணி - திருப்பத்தூர் மாவட்ட அமைச்சர்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா நோய்த் தடுப்புப் பணியில் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு நேற்று (பிப். 20) அமைச்சர் கே.சி வீரமணி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

Breaking News

By

Published : Feb 21, 2021, 1:07 PM IST


திருப்பத்தூர் மாவட்டம் சோலையார்பேட்டை அடுத்த தனியார் திருமண மண்டபத்தில் கோவிட்-19 கரோனா நோய்த்தொற்று காலகட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அரசு முன்கள பணியாளர்களுக்கு நேற்று (பிப். 20) வணிகவரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே. சி வீரமணி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் மருத்துவர்கள், சித்த மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், காவல்துறையினர், வருவாய்த்துறையினர், ஊரக வளர்ச்சி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், கல்வித்துறை,மகளிர் திட்டம் என முன்கள அரசு சார்ந்த பணியாளர்களுக்கு சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவித்து மைக்ரோ ஓவன், ஹாட் பாக்ஸ், டிபன் பாக்ஸ், பலவகையான பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

திருப்பத்தூர் மாவட்டம்
இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் சிவனருள், நேர்முக உதவியாளர் வில்சன் ராஜ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் திலீபன், வாணியம்பாடி மருத்துவ அலுவலர் செல்வகுமார், நாட்றம்பள்ளி மருத்துவ அலுவலர் சுமதி, அரசு அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details