திருப்பத்தூர்: மதிமுக மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் காளிலிங்கம் இல்லத் திருமண விழாவிற்கு வருகை தந்த மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''எம்ஜிஆரால் கண்டெடுக்கப்பட்டு கட்டுக்கோப்பாக வளர்க்கப்பட்ட அதிமுக நான்கு பிரிவுகளாக இருக்கிறது. இதனால் யாருக்கு நன்மை ஏற்படும் என்பதை உணர்ந்து தொண்டர்கள் செயல்பட வேண்டும்.
மத்திய அரசின் பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது. மொத்தத்தில் தேர்தலுக்காக காத்திருக்கும் மாநிலங்களுக்கான பட்ஜெட்டாகவும், தமிழ்நாட்டை புறக்கணிப்பதற்கான பட்ஜெட்டாகவும் இருக்கிறது. அதுமட்டுமின்றி விவசாயிகளின் குறைந்தபட்ச ஆதார விலை, உரங்களுக்கான விலை குறைவு உள்ளிட்ட எந்த அறிவிப்பும் இல்லாமல் ஏமாற்றம் அளிக்கிறது. பாஜக ஆட்சியில் 400 மடங்கு உரங்களின் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது'' எனக் கூறினார். அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை வேங்கை வயல் சம்பவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.