தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாழை தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த நபர் கைது - tirupattur district

ஆம்பூர் அருகே வாழை தோட்டத்தில் கஞ்சா செடி பயிரிட்டு வளர்த்த நபர் கைது செய்யப்பட்டார்.

ஆம்பூர் அருகே வாழை தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த நபர் கைது...
ஆம்பூர் அருகே வாழை தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த நபர் கைது...

By

Published : Oct 23, 2022, 1:35 PM IST

Updated : Oct 23, 2022, 2:26 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி மலை கிராமத்தில் கஞ்சா செடி பயிரிட்டு வளர்த்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து, நாயக்கனேரி மலைகிராமத்தில் ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுப்பட்டனர். அப்பொழுது சீக்குஜோனை என்ற பகுதியில் வசித்து வரும் கோவிந்தசாமி என்பவருக்கு சொந்தமான வாழை தோட்டத்தில் கஞ்சா செடி பயிரிட்டு வளர்த்து வந்தது தெரியவந்தது.

உடனடியாக காவல்துறையினர் கஞ்சா செடிகளை வேருடன் பிடிங்கி எரிந்து நிலத்தின் உரிமையாளரான கோவிந்தசாமியை கைது செய்து, அவர் மீது வழக்குபதிவு செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:வட்டியில்லா கடன் வழங்குவதாக டம்மி ரூபாய் நோட்டுகளுடன் பாவலா காட்டி ரூ.5 லட்சம் சுருட்டியவர் கைது

Last Updated : Oct 23, 2022, 2:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details