திருப்பத்தூர்:ஆம்பூர் அடுத்த சாமியார் மடம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாமணி. இவருக்கும் ஓசூர் பகுதியைச் சேர்ந்த நந்தினி என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு கௌசிக் என்ற மூன்று வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், திருமணமான ஒரு வருடத்திற்குப் பிறகு நந்தினிக்கும் ராஜாமணி குடும்பத்தினருக்கும் தொடர்ந்து அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்தது.
இன்று காலை நந்தினியின் பெற்றோருக்கு அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் நந்தினி தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு வந்த நந்தினியின் பெற்றோர், உறவினர்கள் உடற்கூராய்விற்காக இருந்த நந்தினியின் உடலைக் கண்ட அவர்கள் தலையில் பலத்த காயம் இருப்பதாகவும், தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்தனர்.