தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமைச்சர் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல்- எ.டி.எஸ். பி உட்பட 3 பேர் காயம்! - including ADSP three people injured on overcrowding

ஆம்பூரில் பொதுப்பணித்துறை அமைச்சர் எவ. வேலு பங்கேற்ற மக்கள் குறைகேட்பு சிறப்பு முகாமில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் கண்ணாடி கதவுகள் உடைந்து ஏ.டி.எஸ்.பி உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர்.

அமைச்சர் ஏவா வேலு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல்- எ.டி.எஸ். பி உட்பட 3 பேர் காயம்!
அமைச்சர் ஏவா வேலு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல்- எ.டி.எஸ். பி உட்பட 3 பேர் காயம்!

By

Published : May 30, 2022, 9:20 AM IST

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மக்கள் குறை கேட்பு சிறப்பு முகாம் ஆம்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று(மே 29) நடைபெற்றது.

அமைச்சர் எவ. வேலு, வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா, ஆம்பூர் எம்.எல். எ,ஜோலார் பேட்டை எம்.எல். எ தேவராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அமைச்சரிடம் வழங்கிய நிலையில், திருமண மண்டபத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் வெளியேறும் வாயிலில் இருந்த கண்ணாடி கதவுகள் உடைந்து விழுந்தது.

அமைச்சர் ஏவா வேலு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல்- எ.டி.எஸ். பி உட்பட 3 பேர் காயம்!

இதில் மாதனூர் ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர் ராமமூர்த்தி மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட திருப்பத்தூர் ஏ.டி.எஸ்.பி குமார் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர். பின்னர் உடனடியாக காவல்துறையினர் பொதுமக்களை கட்டுப்படுத்தி பாதுகாப்பான முறையில் வெளியேற்றினர்.

இதையும் படிங்க:உள்ளாட்சி தேர்தலில் தோல்வி ஏன்? செங்கோட்டையன் சொன்ன குட்டிக்கதை

ABOUT THE AUTHOR

...view details