தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாடகை வீட்டில் வசித்த மூதாட்டி பெயரில் ரூ.8 கோடி வரி ஏய்ப்பு! - thirupattur

திருப்பத்தூரில் வாடகை வீட்டில் வசிக்கும் மூதாட்டி பெயரில் ரூ.8 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வந்த கடிதத்தால், அம்மூதாட்டி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

வாடகை வீட்டில் வசித்த மூதாட்டிக்கு ரூ.8 கோடி வரி ஏய்ப்பு!
வாடகை வீட்டில் வசித்த மூதாட்டிக்கு ரூ.8 கோடி வரி ஏய்ப்பு!

By

Published : Dec 21, 2022, 3:35 PM IST

பாதிக்கப்பட்ட மூதாட்டி குல்ஜார் பேட்டி

திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் காந்தி நகரைச்சேர்ந்தவர், குல்ஜார் (60). கணவனை இழந்த இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்களில் மகன் மாற்றுத்திறனாளியாகவும், மகள் இதயநோயாளியாகவும் உள்ளனர். இவர்கள் மூவரும் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மூதாட்டி குல்ஜாரின் வீட்டுக்கு, கடந்த டிசம்பர் 19 அன்று சென்னையில் இருந்து இரு பெண் அரசு அலுவலர்கள் வந்துள்ளனர்.

அவர்கள், மூதாட்டி குல்ஜாரிடம், ’நீங்கள் சான்றோர்குப்பம் பகுதியில் ஐ.எஸ்.என்டர்பிரைஸ் என்னும் நிறுவனம் நடத்தி, அதில் 8 கோடி ரூபாய் வரிஏய்ப்பு செய்துள்ளீர்கள்’ எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும் உடனடியாக வரி பணத்தைக் கட்ட வேண்டும் எனவும், அவ்வாறு பணத்தை கட்டத் தவறினால் தினம்தோறும் அபராதமாக ரூ.500 கட்ட வேண்டும் எனவும் கூறி கடிதம் அளித்துள்ளனர். இதனால் குல்ஜார் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து மூதாட்டியை அப்பகுதி இளைஞர்கள் மீட்டுள்ளனர்.

பின்னர் அவரது ஆவணங்களை வைத்து போலி நிறுவனம் நடத்தி வரிஏய்ப்பு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி சுற்றுவட்டார கிராமங்களில் இதேபோன்று ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என பலருக்கு கடிதம் வந்துள்ளதாகவும், இதுகுறித்து மாவட்ட காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:'தமிழ்நாட்டுக்கு ஜிஎஸ்டி பாக்கி ரூ.1,200 கோடிதான்' - மத்திய நிதியமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details