தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சரக்கு ரயில் பழுது - பயணிகள் பாதிப்பு - chennai bangalore train

ஆம்பூர் அருகே சரக்கு ரயிலில் இரண்டு பெட்டிகள் இணைக்க கூடிய பகுதி துண்டிக்கப்பட்டதால் சென்னை- பெங்களூரு மார்க்கத்தில் செல்லும் ரயில்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டன.

சரக்கு ரயில் பழுது
சரக்கு ரயில் பழுது

By

Published : Aug 2, 2021, 8:41 PM IST

திருப்பத்தூர்: சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் மார்க்கத்தில் ரேணிகுண்டாவிலிருந்து ஜோலார்பேட்டை செல்லும் சரக்கு ரயில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது இரண்டு பெட்டிகள் இணைக்க கூடிய பகுதி துண்டிக்கப்பட்டது. உடனடியாக ஓட்டுநர்கள் ரயிலை நிறுத்தி சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

சரக்கு ரயில் பழுது

இதனால் அவ்வழியே செல்லும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன. ஜோலார்பேட்டை சந்திப்பில் இருந்து பழுது பார்க்க ரயில்வே பணியாளர்கள் யாரும் வராததால் ஓட்டுநர்களே பழுது பார்த்தனர். பின் தற்காலிகமாக பழுது சரி செய்யப்பட்டு ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு ரயிலை இயக்கிச் சென்றன.

இதனால் சென்னை- பெங்களூர் செல்லும் ரயில் பயணிகள் 1:15 மணி நேரம் பாதிப்புக்குள்ளாகினர்.

இதையும் படிங்க: என்னது டீசல் வருதா.... கேன்களுடன் ஓடிய மக்கள்

ABOUT THE AUTHOR

...view details