தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாணியம்பாடியில் வீட்டின் கதவை உடைத்து 20 சவரன் தங்க நகைகள் கொள்ளை..போலீசார் தீவிர விசாரணை..! - All State Crime News in Tamil

Vaniyambadi theft news: வாணியம்பாடியில் பூட்டிய வீட்டிலிருந்து 20 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளையடித்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் தீவிர விசாரணை
வாணியம்பாடியில் வீட்டின் கதவை உடைத்து 20 சவரன் தங்க நகைகள் கொள்ளை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 5, 2023, 4:20 PM IST

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்த மர்மநபர்கள் ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான 20 சவரன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் குறித்து வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சின்னவேப்பம்பட்டு, இந்திரா நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவர் அப்பகுதியில் இரு சக்கர வாகனம் பழுதுபார்க்கும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவர் வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த மேல்பட்டி பகுதியில் உள்ள அவரது மாமனார் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார்.

இந்த நிலையில், இன்று (டிச.05) காலை பழனிக்கு அவரது உறவினர்கள் தொடர்பு கொண்டு, வீட்டின் கதவு திறந்து இருப்பதாகத் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து வீட்டிற்கு வந்து பழனி பார்த்த நிலையில், வீட்டின் கதவு உடைக்கப் பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, வீட்டிற்குள் சென்று பார்த்த நிலையில், வீட்டில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிய நிலையில் இருந்துள்ளது.

இதையும் படிங்க:நெல்லையில் மர்ம நபர்களால் இளைஞர் வெட்டி படுகொலை.. போலீசார் தீவிர நடவடிக்கை!

மேலும், அறையில் இருந்த 4 பீரோக்கள் உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான 20 சவரன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, சம்பவம் குறித்து அவர், வாணியம்பாடி கிராமிய காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கொள்ளைச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்தனர். மேலும் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து தங்க நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்க பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களைத் காவல் துறையினர் தேடி வருகின்றனர். ஆட்கள் நடமாட்டம் அதிகமுள்ள குடியிருப்பு பகுதியில் கொள்ளைச் சம்பவம் நடந்தேறிய நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், கொள்ளை சம்பவம் குறித்து மோப்ப நாய்கள் மற்றும் தடயவியல் துறையினர் வரவழைக்கப்பட்டு குற்றவாளிகள் குறித்த முதற்கட்ட விசாரணையைக் காவல் துறையினர் தொடங்கியுள்ளனர்.

இதையும் படிங்க:நெல்லூர் - மச்சிலிப்பட்டினம் இடையே இன்று கரையைக் கடக்கிறது மிக்ஜாம் புயல்!

ABOUT THE AUTHOR

...view details