திருப்பத்தூர்:ஆம்பூர் தனியார் திருமண மண்டபத்தில் புதிய நீதிக் கட்சி சார்பில் சென்னை ஏ.சி.எஸ் மருத்துவக்கல்லூரி மற்றும் பெங்களூர் ராஜராஜேஸ்வரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய மருத்துவக் கல்லூரிகள் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
இதில் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, "பேரறிஞர் அண்ணா, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் என்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு ஆம்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.
எனது தாயிற்கு 50 வயதில் முறையான மருத்துவ பரிசோதனை செய்யாததால் 80 வயது வரை வாழ வேண்டியவர் 50 வயதிலேயே இறந்து விட்டார். அதே போல் எனது சகோதரரும் முறையான மருத்துவ பரிசோதனை செய்யாததால் இறந்து விட்டார்.