திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே உள்ள மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணியாற்றி வந்த ஐந்து ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான காய்ச்சல் காரணமாக எடுக்கப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அலுவலக வளாகம், அறைகள் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. சக அலுவலர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 5 பேருக்கு கரோனா - திருப்பத்தூர் மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலகம்
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரிந்த ஐந்து பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு
இதேபோல், நேற்று (ஜன 27), ஆம்பூர், மாதனூர், வெங்கடசமுத்திரம் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 35 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் நோய் தொற்று பாதிப்பு அதிகம் உள்ளவர்கள் மட்டும் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, நகராட்சி மற்றும் ஊராட்சி பணியாளர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
இதையும் படிங்க: மணலி மண்டலத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா தொற்று