திருப்பத்தூர்:ஆம்பூர் அடுத்த கைலாசகிரி மலை அடிவாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் இன்று மாலை சுமார் 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று புகுந்தது. உடனடியாக இதனை கண்ட அப்பகுதிமக்கள் இதுகுறித்து ஆம்பூர் தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
குடியிருப்பு பகுதியில் புகுந்த 9 அடி நீள மலைப்பாம்பு! - திருப்பத்தூர் செய்திகள்
ஆம்பூர் அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த 9 அடி நீள மலைப்பாம்பை தீயணைப்பு துறை வீரர்கள் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
குடியிருப்பு பகுதியில் புகுந்த 9 அடி நீள மலைப்பாம்பு!
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பினை பிடித்து வனப்பகுதியிற்க்குள் விட்டனர்.
இதையும் படிங்க:முஸ்லீம்னா தீவிரவாதியா? - பேராசிரியரிடம் கேள்வி எழுப்பிய மாணவன்!