திருப்பத்தூர்:ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் விமல். இவரின் பிறந்தநாளை ஐம்பதுக்கும் மேற்பட்ட நண்பர்கள் வீராங்குப்பம் பேருந்து நிறுத்தம் அருகே நேற்று முன்தினம் (அக்.22) இரவு சாலையில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
அப்போது, ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ஜானகிராமனும் கலந்து கொண்டுள்ளார்.
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இரு தரப்பினரிடையே மோதல் இந்நிலையில், பட்டாசு வெடித்ததில் எதிர்பாராத விதமாக அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த செல்வராஜ், அருண், வசந்த்குமார், வெற்றி ஆகியோருக்கும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறி இரு தரப்பினரும் கட்டை மற்றும் கற்களால் சரமாரியாக தாக்கி கொண்டதில் மூன்று பேர் காயமடைந்து ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மோதலில் பேருந்து நிறுத்தம் அருகே செயல்பட்டு வந்த முதியவரின் பழக்கடை ஒன்று அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இரு தரப்பினரிடையே மோதல் காவல்துறையினர் விசாரணை
இது குறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் டி.எஸ்.பி சரவணன் தலைமையிலான காவல்துறையினர் மோதலில் ஈடுபட்டவர்களை விரட்டி அனுப்பினர்.
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இரு தரப்பினரிடையே மோதல் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் அப்பகுதி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு திமுக சார்பாக கௌரி பழனி என்பவர் போட்டியிட்டு சுயேச்சை வேட்பாளர் திவ்யா ஜானகிராமனுடன் தோல்வியை தழுவினார்.
மோதல் ஏற்பட்ட பகுதி கௌரி பழனி ஆதரவாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்று தெரிகிறது. வெற்றி பெற்றவரின் ஆதரவாளர்கள் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால்தான் மோதல் ஏற்பட்டது என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ஜானகிராமன் உமராபாத் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:வணிகவரித் துறைக்கு இழப்பை ஏற்படுத்தும் அலுவலர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை - அமைச்சர் மூர்த்தி