தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தவர் தலைமறைவு - பாலியல் வன்புணர்வு திருப்பத்தூர்

திருப்பத்தூர்: 15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு தலைமறைவான நபரைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

all women police station thirupattur
all women police station thirupattur

By

Published : Jun 20, 2020, 11:19 AM IST

திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு ஜெடையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பு. இவர் கட்டடப் பணி செய்துவருகிறார். அவரது 15 வயது மதிக்கத்தக்க மகள், அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் திருப்பதி (40) என்பவர் வீட்டிற்குத் தண்ணீர் குடிக்கச் சென்றுள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் சிறுமியை திருப்பதி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இது குறித்து வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டலும் விடுத்துள்ளார். ஆனால் சிறுமி இது தொடர்பாக உறவினர்களிடம் தெரிவித்து அழுதுள்ளார்.

அதனால் உறவினர்கள் திருப்பதியை பிடிக்கச் செல்லும்போது, அவர் அங்கிருந்து தப்பியோடினார். இது குறித்து திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, அவர் தீவிரமாகத் தேடப்பட்டுவருகிறார். மேலும் திருப்பதி சிறுமிக்கு சித்தப்பா முறை என்பது கூடுதல் வேதனை.

இதையும் படிங்க:பெண்களிடம் கூட்டுப் பாலியல் கொடுமை: காணொலி எடுத்து பணம் பறித்து வந்த கும்பல் கைது!

ABOUT THE AUTHOR

...view details