திருப்பத்தூர்: திருப்பத்தூர் ஒன்றியத்திற்குள்பட்ட காக்கனாம் பாளையம் ஊராட்சி ராஜபாளையம் கொல்லக் கொட்டாய் பகுதியில் வசிப்பவர் விவசாயி சிவராமன்.
இவரது மகன் சீனிவாசன் (34). சிவராமனின் சகோதரர்களின் பிள்ளைகள் ஆட்டோ ஓட்டுநர் தேவன் (45), ராணுவ வீரர் காளியப்பன் (40), ஆட்டோ ஓட்டுநர் சிவக்குமார் (30), ராணுவவீரர் கிருஷ்ணமூர்த்தி (40), ஓட்டுநர் ராமமூர்த்தி (45).
இவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு சிவராமன் விலை கொடுத்து வாங்கிய இரண்டரை ஏக்கர் நிலத்தில் தங்களுடைய நிலத்திற்குச் செல்ல வழிகேட்டு பிரச்சினையில் ஈடுபட்டுவந்துள்ளனர்.
தாங்கள் விலை கொடுத்து வாங்கிய நிலத்தில் வழி கேட்டதால் சம்மதிக்காத சிவராமனையும் அவருடைய மகன் சீனிவாசனையும் தேவன், காளியப்பன், சிவகுமார், கிருஷ்ணமூர்த்தி, ராமமூர்த்தி ஆகியோர் கூட்டாகச் சேர்ந்து இரும்புக் கம்பிகளாலும் உருட்டுக் கட்டைகளாலும் பலமாகத் தாக்கி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் பலத்த காயமடைந்த சீனிவாசன், அவருடைய தந்தை சிவராமன் ஆகியோர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க:லாரி கிளீனரின் அந்நியன் அவதாரம் - அதிர்ச்சியடைந்த போலீஸ்