திருப்பத்தூர் மாவட்டம் அத்தனாவூர் அருகேயுள்ள ஊர்கான் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி தோழன். இவரது விவசாய நிலத்தின் வழியாகச் செல்லும் மின் வயர்கள் தாழ்வாக உள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள் மின்வாரியத்திடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் ஒரு வருடமாகியும் மின் வயரை அலுவலர்கள் சரிசெய்யாமல் உள்ளனர்.
தாழ்வாகச் செல்லும் மின் வயரால் விவசாயிகள் அச்சம் இது குறித்து விவசாயி தோழன் மகள் கமலா தெரிவித்ததாவது, "எங்கள் விவசாய நிலம் வழியாக ஊர்காண் தோட்டம் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிக்கு மின்சார வயர் செல்கிறது. இந்த மின் வயர் மிகவும் தாழ்வாகச் செல்கிறது.
தாழ்வாகச் செல்லும் மின் வயரால் விவசாயிகள் அச்சம் இது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கம்பு வைத்து அதை கொஞ்சம் உயரமாக தூக்கி நிறுத்தியுள்ளோம்.
தாழ்வாக செல்லும் மின் வயரால் விவசாயிகள் அச்சம் அதிக காற்று வீசினால் வயர்கள் ஒன்றுடன் ஒன்று உராய்வு ஏற்பட்டு தீப்பிடித்து எரிகிறது. ஆடு, மாடுகளை மேய்க்க பயமாக உள்ளது. மின்வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
தாழ்வாக செல்லும் மின் வயரால் விவசாயிகள் அச்சம் இதையும் படிங்க: பயிர் காப்பீட்டில் பழைய முறையை அமல்படுத்துக - விவசாயிகள் கோரிக்கை!