திருப்பத்தூரில் உள்ள கிழக்கு வட்டம் பகுதியில் இரண்டு நாளாக பெய்த மிதமான மழையினால் பருத்தி மற்றும் துவரை பூக்கல் உதிர்ந்து சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், “நாங்கள் நகையை அடகு வைத்து பருத்தி மற்றும் துவரையை சாகுபடி செய்து வந்தோம். இரண்டு நாளாக பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த பருத்தி நனைந்து கருகிவிட்டது. இதனை பருத்தி வியாபாரிகள் வாங்க முன் வரமாட்டார்கள். குறைந்த விலைக்கே கேட்பார்கள். அதுமட்டுமின்றி துவரை பூத்து குலுங்கும் நேரத்தில் மழையினால் பூக்களின் காம்புகள் அழுகி உதிர்கின்றது.
திருப்பத்தூரில் மழையால் பருத்தி, துவரை சேதம் - விவசாயிகள் வேதனை - திருப்பத்தூரில் மிதமழை
திருப்பத்தூரில் இரண்டு நாள்களாக பெய்த மழையில் பருத்தி மற்றும் துவரை சேதமானதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
திருப்பத்தூர் மித மழையால் பருத்தி, துவரை பூக்கள் சேதம் ; விவசாயிகள் வேதனை
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க: சென்னையை உலுக்கிய மாண்டஸ் புயல் - புகைப்படத் தொகுப்பு