மருந்து கடையில் வைத்து மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் கச்சேரி தெரு பகுதியில் மணி மெடிக்கல் என்ற பெயரில் மெடிக்கல் வைத்துள்ளார். இவர் மருத்துவ படிப்பு படிக்காமலேயே அவருடைய மெடிக்கலில் குழந்தை இல்லாத பெண்களுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார். எம்பிபிஎஸ் டாக்டர்கள் கொடுக்காத அதிக வீரியம் வாய்ந்த மருந்துகளையும் கொடுத்து வந்ததாக தெரிகிறது.
இதன் காரணமாக மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, மருந்து கடைக்கு விரைந்து சென்ற இணை இயக்குனர் மாரிமுத்து மற்றும் மாவட்ட மருந்த ஆய்வாளர் சபரிநாதன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மருந்தாளுனர் அருள் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
மருந்து கடையில் வைத்து மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது அப்போது சுப்பிரமணி அதிக வீரியம் கொண்ட மருந்துகள் உபயோகிப்பதும், நோயாளிகளுக்கு மருத்துவம் அளிப்பதையும் உறுதி செய்தனர். இதன் காரணமாக திருப்பத்தூர் நகர போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டு சுப்பிரமணியன் கைது செய்தனர். அவருடைய மெடிக்கலுக்கு திருப்பத்தூர் வட்டாட்சியர் சிவப்பிரகாசம் தலைமையில் சீல் வைக்கப்பட்டது.
சுப்பிரமணி கர்ப்பம் தரிக்காத பெண்களுக்கு கர்ப்பம் தரிக்க வைப்பதில் வல்லவர் எனவும், திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் குழந்தை இல்லாத பெண்கள் இவரிடம் சிகிச்சை பெறுவதற்காக படையெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆசிரம வழக்கில் கைதான 8 பேரை 3 நாட்கள் சிபிசிஐடி விசாரிக்க அனுமதி!