தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

12ஆம் வகுப்பு படித்த போலி மருத்துவர் கைது! - போலி மருத்துவர் கைது

திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை அருகே 12ஆம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த நபரை காவலர்கள் கைது செய்தனர்.

12ஆம் வகுப்பு படித்த போலி மருத்துவர் கைது!
Thiruppathur fake doctor

By

Published : Sep 3, 2020, 9:03 PM IST

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத் (43). இவர், மருத்துவம் படிக்காமல், மருத்துவம் பார்த்து வருவதாக மாவட்ட ஆட்சியர் சிவன் அருளிடம் அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர்.

அதனடிப்படையில் வட்டாட்சியர் மோகன், அரசு மருத்துவர் குமரவேல் அடங்கிய குழுவினர் அப்பகுதியில் ஆய்வு மேற்க்கொண்டனர்.

அப்போது, அப்பகுதியில் லித்யா ஸ்ரீ என்ற பெயரில் 12ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த சம்பத் மருத்துவம் பார்த்துவந்தது தெரியவந்தது.

அதனைத்தொடர்ந்து மருத்துவமனையிலிருந்த மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் ஆகியவற்றை கைப்பற்றிய அலுவலர்கள், மருத்துவமனைக்கு சீல் வைத்தனர்.

பின்னர், போலி மருத்துவரான சம்பத்தை ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details