திருப்பத்தூர்:வாணியம்பாடி அடுத்த ஜாப்ராபாத் ஊராட்சிக்குட்பட்ட பீர்ஜி தெருவில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ரூபாய் 1.80 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.
பீர்ஜி தெருவில் சுமார் 56.80 மீட்டரில் அமைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் அப்பகுதியில் உள்ள மின்கம்பத்துடன் சேர்த்து கட்டியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.