வருகின்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாதுகாப்பு குறித்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் திருப்பத்தூர் மாவட்டம், சட்டப்பேரவைத் தேர்தல் பாதுகாப்பு பணிகளை கண்காணிக்க இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட தேர்தல் காவல் பொது பார்வையாளர் அவினேஷ்குமாருக்கு, தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் விவரித்தார்கள்.
இக்கூட்டத்தின் முக்கிய குறிக்கோளாக தேர்தல் காவல் பொது பார்வையாளர் அவினேஷ்குமார் கூறுகையில், “திருப்பத்தூர் மாவட்டத்தின் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலுள்ள வாக்குச்சாவடிகளின் பலத்த பாதுகாப்பு குறித்தும், பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிந்து அதனை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளருக்கு உடனடியாக தகவல் அளிக்க வேண்டும். வாக்கு இயந்திரங்களைக் கொண்டு செல்லும்போதும், தேர்தல் முடிந்த பின்பு எடுத்து வரும்போதும் பாதுகாப்பாக கொண்டு வர வேண்டும்.