திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பேருந்து நிலையத்தில் வாணியம்பாடி சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருப்பத்தூர் கொரட்டி பகுதியைச் சேர்ந்த கோழி வியாபாரி ராஜேந்திரன் என்பவரிடமிருந்து கணக்கில் வராத ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாயைப் பறக்கும் படை அலுவலர்கள் பறிமுதல்செய்தனர்.
தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் லட்சக்கணக்கான ரொக்கமும் பொருள்களும் பறிமுதல் - திருப்பத்தூர் மாவட்டச்செய்திகள்
திருப்பத்தூர்: ஆம்பூர், வாணியம்பாடியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் நடத்திய வாகன சோதனையில் இரண்டு லட்சத்து எட்டாயிரம் ரூபாய், 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருள்கள் பறிமுதல்செய்யப்பட்டன
அதேபோல், ஆம்பூர் அடுத்த மாதனூர் சோதனைச்சாவடியில் சென்னையிலிருந்து கோவாவுக்குச் சுற்றுலா சென்ற திலீப் குமார் என்ற கல்லூரி மாணவனிடமிருந்து 93 ஆயிரம் ரூபாய் கணக்கில் வராத பணத்தையும், ஆம்பூர் புறவழிச்சாலையில் உரிய ஆவணமின்றி எடுத்துச்செல்லப்பட்ட 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருள்களையும் பறிமுதல்செய்த பறக்கும்படை அலுவலர்கள், பறிமுதல்செய்யப்பட்ட பணத்தை ஆம்பூர், வாணியம்பாடி சார்நிலைக் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: விழிப்புணர்வு இருந்தால் இந்தத் தேர்தல் நமக்கான தேர்தலாக இருக்கும்!