ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன். இவர் துத்திப்பட்டு ஊராட்சியின் 12ஆவது வார்டு உறுப்பினராக உள்ளார். திமுகவில் உறுப்பினராகவும் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக கிளைச் செயலாளரான சாந்தராஜ் என்பவருக்கும் குமரேசனுக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் உள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் குமரேசன் துத்திப்பட்டு பகுதியில் தனது நண்பர்களுடன் இருந்த போது, அங்கு வந்த சாந்தராஜின் மகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் குமரேசனை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதனைத்தொடர்ந்து குமரேசனை மீட்ட நண்பர்கள் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.