திருப்பத்தூர்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் மதச்சார்பற்ற ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டு வந்தார்.
வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்த ஸ்டாலின் - Stalin walking down and collecting votes
வாணியம்பாடியில் பரப்புரை மேற்கொள்ள வந்த திமுக தலைவர் ஸ்டாலின், அப்பகுதியின் முக்கிய சாலை ஒன்றில் நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.
DMK leader Stalin walking down the street and collecting votes in vaaniyampadi
அப்போது, வேலூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஸ்டாலின், திடீரென ஜோலார்பேட்டை பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள முக்கிய சாலையில் இறங்கி நடந்தே சென்று, வாணியம்பாடி தொகுதியில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நயிம் அகமதுவிற்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கத் தொடங்கினார்.
சி.எல். சாலை வழியாக நடந்து சென்ற ஸ்டாலினை சந்திக்க மக்கள் பெரிதும் ஆர்வம் காட்டினர். மேலும், பலர் அவருடன் கைகுலுக்கியும் புகைப்படங்கள் எடுத்தும் மகிழ்ந்தனர்.