திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாதனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 24 ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கான மாதாந்திரக் கூட்டம் ஒன்றிய பெருந்தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கடந்த 8 மாதங்களாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு முறையாக கணக்கு காட்டவில்லை எனவும், ஒன்றியக் குழு உறுப்பினர்களை ஆலோசிக்காமல் ஒன்றியத்தலைவர் தன்னிச்சையாக முடிவெடுத்து செயல்படுவதாகவும் கூறுகின்றனர்.
ஒன்றியத்தலைவருக்கு எதிராக திமுக, அதிமுக வார்டு கவுன்சிலர்கள் நாற்காலியை வீசியெறிந்து தாக்குதல் மேலும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஒன்றியக்குழு தலைவருக்கு எதிராக, ஒன்றிய குழு வார்டு உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு நாற்காலியை வீசியெறிந்தனர்.
இந்நிலையில் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அமர்ந்து 17 திமுக மற்றும் அதிமுக ஒன்றியக் குழு உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: ஆம்பூர் அருகே இளம்பெண் உடல் கண்டெடுப்பு