தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாலாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் - ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் - Tirupattur district news

தமிழ்நாடு- ஆந்திரா எல்லைப்பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக பாலாற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா ஆய்வு செய்தார்.

district-collector-amar-palar-river-water-overflow
பாலாற்றில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீர்: ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்

By

Published : Jul 9, 2021, 11:31 AM IST

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை இடியுடன் கூடிய கனமழை பெய்ததது. மேலும், தமிழ்நாடு-ஆந்திர எல்லைப்பகுதிகளில் பெய்த கனமழையால் தமிழ்நாடு எல்லையில் உள்ள தடுப்பணையை கடந்து பாலற்றில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மலைகளில் இருந்து ஓடை நீர், பாலாற்றில் கலந்து அம்பலூர் தரைப்பாலத்திற்கு மேல் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.இதனை காண ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.

பாலாற்றில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீர்

மேலும், அம்பலூர் பாலாறு பகுதியில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா, பாலாற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடனும், தகுந்த பாதுகாப்புடன் இருக்கவேண்டும் என அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க:ரூ. 3 லட்சம் மதிப்பிலான குட்கா பொருள்கள் பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details