திருப்பத்தூர்நகராட்சி பகுதிக்குட்பட்ட தில்லை நகர் பகுதியில் வசிப்பவர், சபாபதி(40). இவர் நான்கு வருடங்களுக்கு முன்பு திருப்பத்தூர் வாணியம்பாடி சாலை அருகே அமைந்துள்ள ஸ்ரீ பாலமுருகன் டிவிஎஸ் நிறுவனத்தில் இருசக்கர வாகனத்திற்கு முன்பணம் செலுத்தி, இருசக்கர வாகனத்தை தவணை முறையில் வாங்கியுள்ளார்.
சபாபதி தற்போது வரை 50ஆயிரம் ரூபாய் வரை பணம் கட்டியும்; அவர் வாகனத்திற்கு இதுவரை ஆர்.சி புக் வழங்கப்படவில்லை. இதனால் சபாபதி பலமுறை காவல்துறையின் சோதனைக்கு உட்பட்டு அபராதத் தொகையை கட்டி உள்ளார். இதனால் மனஉளைச்சல் அடைந்த சபாபதி தன்னுடைய வாகனத்திற்கு ஆர்.சி புத்தகம் வேண்டும் என்று அலைக்கழித்த ஷோரூம் முன் திருப்பத்தூர் - வாணியம்பாடி சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.