திருப்பத்தூர்:ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த முபாரக் அலி என்பவர், மக்கள் நீதி மய்யம் கட்சியில் மாதனூர் ஒன்றியச் செயலாளராக உள்ளார்.
இந்நிலையில் முபாரக் அலி தான் வசிக்கும் பெரியாங்குப்பம் 4-வது வார்டு பகுதியில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது எனவும்; பெரியாங்குப்பம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் சரிவர இயக்கப்படாமல் இருக்கிறது என்றும், இதுகுறித்து பலமுறை ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர் எனவும் சமூக வலைதளங்களின் மூலம் அரசு அலுவலர்களுக்கு புகார் அளித்துள்ளார்.