திருப்பத்தூர்: கரோனா நோயாளிகளின் மன அழுத்தத்தை போக்க சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையத்தில் நடனப்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அக்ரகாரம் தொழில் நுட்ப கலைக்கல்லூரி கட்டடத்தில் செயல்பட்டு வரும் சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையம் கடந்த ஜூலை 16-ம் தேதி முதல் 60 படுக்கை வசதிகளுடன் இயங்கி வருகிறது.
சிகிச்சை பெறுபவர்களுக்கு சிறப்பு மைய வளாகத்திலே கரோனா தொற்று நோயாளியின் மன அழுத்தத்தை போக்க நடனப் பயிற்சி குத்தாட்டம் போன்ற மனமகிழ்ச்சி ஏற்படுத்துவதுடன் அது மட்டுமின்றி மண்பானை உணவுகள், மூலிகை சூப், ஆவி பிடித்தல், யோகா பயிற்சிகள், காலை, மாலையில் நடைப்பயிற்சியும் இரவில் பஃபே முறையில் நிலாச்சோறு, விளையாட்டுடன் வீடியோ படக்காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுவதால் நோயாளிகள் கடுமையான மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதுடன் விரைவில் குணமடைந்து வீடு ஐந்து நாள்களில் வீடு திரும்பியுள்ளனர்.
சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையத்தில் மற்றுமொரு முன் முயற்சியாக சிறிய நூலகம் ஒன்றையும் ஏற்படுத்தியுள்ளனர்.