தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாணியம்பாடி அருகே கள்ளச்சாராய ஊறல் அழிப்பு

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே வனப்பகுதியில் ட்ரோன் கேமரா மூலம் கண்டறிந்து 1000 லிட்டர் கள்ளச்சாராயம் ஊறலை மது விலக்கு அமலாக்கத் துறையினர் அழித்தனர்.

ட்ரோன் கேமரா மூலம் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு
ட்ரோன் கேமரா மூலம் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு

By

Published : Jun 12, 2021, 2:13 AM IST

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழ்நாடு-ஆந்திரா எல்லைப்பகுதியான மாதகடப்பா வனப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.பி. சக்கரவர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

மது விலக்கு அமலாக்கத்துறை

அதனடிப்படையில் வாணியம்பாடி மது விலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் தமிழரசி தலைமையிலான காவலர்கள் மாதகடப்பா மலைப்பகுதியில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் ட்ரோன் கேமரா மேலே பறப்பதைக் கண்ட சாராயம் காய்ச்சும் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து மலைப்பகுதியில் சாராய காய்ச்சுவதற்காக வைத்திருந்த 1000 லிட்டர் ஊறல் மற்றும் சாராய அடுப்பு ஆகியவற்றை அழித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details