திருப்பத்தூர்: ஆம்பூர் நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று(ஆக.9) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தூய்மை பணியாளர் கோவிந்தன் கூறுகையில், " கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் 130 க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளர்களாக ஆம்பூர் நகராட்சியில் பணிபுரிந்து வருகிறாம். சம்பளம், போனஸ், பணி பாதுகாப்பு உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தியுள்ளளோம்.
கரோனா காலத்தில் முகக்கவசம், கையுறை, கிருமி நாசினி உள்ளிட்ட பாதுகாப்பு பொருட்கள் கூட நகராட்சி நிர்வாகம் வழங்கவில்லை.நாங்கள் எங்கள் சொந்த பணத்தில் வாங்கி பயன்படுத்துகிறோம். குப்பை அள்ளும் வாகனம் பழுதை சரி செய்யக் கூட நகராட்சி நிர்வாகம் முன்வருவது இல்லை.
நகராட்சி நிர்வாகம் தங்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து நிறைவேற்றும் வரையில் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக " அவர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: முடிவடைந்தது நேர்காணல்: அடுத்த துணைவேந்தர் யார்?