தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிணற்றில் குளித்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு - கிணற்றில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர் மரணம்

திருப்பத்தூர்: கிணற்றில் குளித்த கல்லூரி மாணவர் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

death
death

By

Published : Jun 1, 2020, 10:56 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஓம் சக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயபாரதி. இவருடைய மகன் விஜயராஜ் (19). இவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு பயின்று வந்தார். இவருடைய நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த கார்த்தி, முகேஷ் ஆகிய மூவரும் சேர்ந்து கிருஷ்ணமூர்த்தி என்பவருக்குச் சொந்தமான ஆதி சக்தி நகர் பகுதியிலுள்ள கிணற்றில் குளிக்க சென்றனர்.

விஜயராஜூக்கு சரிவர நீச்சல் தெரியாத நிலையில், மூவரும் கிணற்றுக்குள் குதித்தபோது கார்த்தி, முகேஷ் இருவரும் நீச்சலடித்து மேலே வந்துள்ளனர். இந்நிலையில், விஜயராஜ் சிறிது நேரம் ஆகியும் மேலே வராததால் நண்பர்கள் இருவரும் பதற்றத்தில் அருகிலிருப்பவர்களை அழைத்து கிணற்றில் தேடினர். பின்னர், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், சுமார் இரண்டு மணி நேரம் தேடுதலுக்குப் பிறகு விஜயராஜ் உடலை மீட்டனர்.

கல்லூரி மாணவர் மரணம்

இதனையடுத்து, மீட்கப்பட்ட உடல் உடற்கூறாய்வுக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துணை கண்காணிப்பாளர் தங்கவேல் நேரில் விசாரணை மேற்கொண்டார். நீச்சல் தெரியாமல் கிணற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க:கரோனா பேரிடர்: மாற்றங்களை எதிர்நோக்கி நெதர்லாந்து சுற்றுலாத் துறையினர்

ABOUT THE AUTHOR

...view details