தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயில் திருவிழாவில் மோதல்: இளைஞர் கொலை - கோயில் திருவிழாவில் மோதல்

திருப்பத்தூர் மாவட்டம் கலைஞர் நகரில் கோயில் திருவிழாவின்போது ஏற்பட்ட கோஷ்டி மோதலில் இளைஞர் கொலை செய்யப்பட்டார்.

இளைஞர் கொலை
இளைஞர் கொலை

By

Published : May 1, 2022, 8:26 AM IST

திருப்பத்தூர்: கலைஞர் நகரை சேர்ந்த இளைஞர்களுக்கும், டிஎம்சி காலனியை சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையே ஒவ்வொரு ஆண்டும் கோயில் திருவிழாவின்போது மோதல் ஏற்படுவது தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 30) கலைஞர் நகரில் கோயில் திருவிழா நடத்தப்பட்டது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து நேற்று இரவு சுமார் 9 மணியளவில், டிஎம்சி காலனி இளைஞர்கள் கலைஞர் நகரை சேர்ந்த அண்ணாதுரை என்பவரின் மகன் முகிலன் (22) என்பவரை சரமாரியாக தாக்கினர். இந்த தாக்குதலில் முகிலனுக்கு ரத்த காயம் ஏற்பட்டது. உடனே முகிலனை அங்கிருந்தவர்கள் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

ஆனால் ஆத்திரம் தீராத டிஎம்சி காலனி இளைஞர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் முகிலனை ஓட ஓட சரமாரியாக வெட்டி படுகொலை செய்து, அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த களேபரத்தால் மருத்துவமனை வளாகத்தில் இருந்த நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் நாலா புறமாக சிதறியடித்து ஓடினர்.

பின்னர் தகவலறிந்த திருப்பத்தூர் டவுன் காவல் துறையினர் விரைந்து வந்து படுகொலை செய்யப்பட்ட முகிலனின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்ப முடிவு செய்தனர். ஆனால், அதற்குள் முகிலனின் தரப்பினர் கொலையாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தியும், அதுவரை முகிலனின் உடலை உடற்கூராய்வு செய்ய எதிர்ப்பு தெரிவித்தும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். மேலும் அசம்பாவிதங்கள் தவிர்க்க நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சாதி மறுப்பு திருமணம் செய்த மகளை கடத்திய தந்தை உட்பட 9 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details