திருப்பத்தூர்:தமிழ்நாடு முழுவதும் நீர் பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்துள்ள குடியிருப்புகளை அகற்ற உச்ச நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுவருகின்றன. இதன்படி திருப்பத்தூர் மாவட்டம் தண்டபாணி கோவில் தெருவில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அவர்கள் காலி செய்யவில்லை.
இந்த பகுதிகளில் 80 ஆண்டுகளுக்கும் மேலாக நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருவதாக கூறி எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இந்த எதிர்ப்பை மீறி இன்று (டிசம்பர் 20) விடியற்காலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஜேசிபி எந்திரங்கள் கொண்டுவரப்பட்டன.