திருப்பத்தூர்: கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட தாயப்பன் நகர் பகுதியில் வசிப்பவர்கள் கலைச்செல்வன் (30), பவித்ரன் (28). சகோதரர்களான இருவரும் பெங்களூரு பகுதியில் உள்ள தனியார் ஐடி கம்பெனியில் பணிபுரிகின்றனர். கரோனா நோய்த்தொற்று காரணமாக இருவரும் பெங்களூருவில் இருந்து திருப்பத்தூருக்கு வந்து வீட்டிலிருந்தபடியே தற்போது வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று (பிப். 26) இருவரும் வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கையில், பவித்திரனுக்கு சொந்தமான சுமார் 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான காரை திருடிச் சென்றுள்ளனர். அவர்கள் பட்டப்பகலில் வீட்டிற்குள் நுழைந்து பூஜை அறையிலிருந்த காரின் சாவியை எடுத்து அடையாளம் தெரியாத நபர்கள் எடுத்துச்சென்றது தெரியவந்தது.