திருப்பத்தூர் :நாட்டறம்பள்ளி அடுத்த மல்லபள்ளிப் பகுதியைச் சேர்ந்த அசோக் (53) துணி வியாபாரம் செய்து வருகிறார். இவர் நாட்டறம்பள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் துணி வியாபாரம் செய்துவிட்டு, சுண்ணாம்பு குட்டை தேசிய நெடுஞ்சாலை அருகே வந்து கொண்டிருந்தார்.
அப்பொழுது, ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், வின்னுகுண்டா பகுதியைச் சார்ந்த வெங்கடராவ் (40) தனது ஐந்து நண்பர்களுடன் ஐயப்பனுக்கு மாலை அணிந்து கொண்டு டொயோட்டா காரில், இன்று நாட்டறம்பள்ளி வழியாக தேசிய நெடுஞ்சாலையில் சபரிமலை நோக்கிச் சென்று கொண்டிருந்த பொழுது ஓட்டுநர் வெங்கட் ராவ் எதிர்பாராத விதமாக கண் அசந்து தூங்கி உள்ளார்.