தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாட்றம்பள்ளி இன்ஸ்பெக்டர் மீது பாஜக கவுன்சிலர் புகார்! - tirupattur latest news

திருப்பத்தூரில் தனது புகார் மனு மீது நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளர் மற்றும் காவல் துணை ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாஜக கவுன்சிலர் மனு அளித்துள்ளார்.

நாட்றம்பள்ளி இன்ஸ்பெக்டர் மீது பாஜக கவுன்சிலர் புகார்!
நாட்றம்பள்ளி இன்ஸ்பெக்டர் மீது பாஜக கவுன்சிலர் புகார்!

By

Published : Feb 23, 2023, 7:14 AM IST

நாட்றம்பள்ளி பேரூராட்சியின் 14வது வார்டு பாஜக கவுன்சிலர் குருசேவ் அளித்த பேட்டி

திருப்பத்தூர்: திருப்பத்தூரை அடுத்த நாட்றம்பள்ளி பேரூராட்சியின் 14வது வார்டு பாஜக கவுன்சிலர் குருசேவ், நேற்று (பிப்.22) திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு மனு முகாமில் கலந்து கொண்டு புகார் அளித்தார். அப்போது அவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரைச் சந்தித்து நாட்றம்பள்ளி ஆய்வாளர் சாந்தி மற்றும் உதவி ஆய்வாளர் முனி ரத்தினம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

பின்னர் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாஜக கவுன்சிலர் குருசேவ், "கடந்த 2022ஆம் வருடம் நவம்பர் மாதம் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் உத்தரவின் பேரில், பால் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக காவல் நிலையத்திற்குச் சென்று அனுமதி கடிதம் கொடுத்ததாக கூறினார்.

அப்போது அந்தக் கடிதத்தை விசாரித்த காவல் ஆய்வாளர் சாந்தி தன்னை மிகவும் தரக்குறைவாக பேசியது மட்டுமில்லாமல், கலெக்டர் முன்பு தன்னை ஆஜர்படுத்தி குண்டாஸில் கைது செய்து விடுவதாகவும் மிரட்டினார் என்றார். தொடர்ந்து பேசிய குருசேவ், தான் அவ்வப்போது சமூகப் பிரச்னைகள் குறித்தும், தன்னுடைய வார்டு தேவைகள் குறித்தும் பள்ளி சுற்றுச்சுவர் எழுப்புவது குறித்தும் போராடுவதாக கூறினார்.

எனவே இது போன்ற நேரங்களில் யாராவது தனிநபர் தன்னை மிரட்டினால், அது குறித்தும் காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்தாலும், அந்த புகார் மனு மீது காவல் ஆய்வாளர் சாந்தியும், உதவி ஆய்வாளர் முனி ரத்தினமும் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை எனத் தெரிவித்தார்.

மேலும் இது குறித்து தற்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் முறையிட்டுள்ளதாகவும், அதற்கு அவர் கூடுதல் காவல் கண்காணிப்பாளரை அழைத்து புகார் குறித்து நடவடிக்கை எடுக்க கூறியுள்ளதாகவும் தெரிவித்தார். அதேநேரம் இனியும் முறையாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் குருசேவ் தெரிவித்தார்.

இதையும் படிங்க:"வேலையை செய்யாமல் ஆளுநர் அக்கப்போர் செய்கிறார்" அமைச்சர் பொன்முடி கண்டனம்!

ABOUT THE AUTHOR

...view details