திருப்பத்தூர் மாவட்டத்தில் கொணவட்டம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதால், அப்பகுதி தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு தீவிரக் கண்காணிப்பில் இருந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று (03.05.2020) இரவு கொணவட்டம் பகுதியில் சிலர் கும்பலாக கேரம் விளையாடியதாகத் தெரிகிறது. இதில் இருதரப்பினருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியுள்ளது. இந்த, மோதலில் 2 பேர் காயமடைந்துள்ளனர். மோதலின் போது ஒரு தரப்பைச் சேர்ந்த ஒருவர் பட்டாக்கத்தியுடன் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.