தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பசிலிகுட்டை முருகன் கோவில் ஆடிப்பெருக்கு திருவிழா..!

ஆடிப்பெருக்கான இன்று சுமார் லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் மற்றும் காவடி எடுத்தும் அலகு குத்தியும், தேர் இழுத்தும், நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பசிலிகுட்டை முருகன் கோவில் ஆடிப்பெருக்கு திருவிழா..!
பசிலிகுட்டை முருகன் கோவில் ஆடிப்பெருக்கு திருவிழா..!

By

Published : Aug 3, 2022, 10:31 PM IST

திருப்பத்தூர்:அடுத்த பசலிகுட்டை பகுதியில் புகழ்பெற்ற அறுபடை ஶ்ரீ முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு கடந்த 100 வருடங்களுக்கு மேலாக பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பொதுமக்கள் ஆடி 1ஆம் தேதி முதல் 18 நாள்கள் விரதமிருந்து, ஆடிப்பெருக்கு அன்று காவடி எடுத்து, அலகு குத்தி முருகன் கோயிலுக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் ஆடிப்பெருக்கான இன்று(ஆகஸ்டு 03) சுமார் லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் மற்றும் காவடி எடுத்தும் அலகு குத்தியும், தேர் இழுத்தும், நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மேலும் குன்றின் மேல் உச்சியில் உள்ள முருகனைக் கண்டு பக்தர்கள் அரோகரா என்று கோஷம் எழுப்பினர். மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு பாதுகாப்பு பணிகள் மற்றும் கூடுதல் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அதேபோல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் சுமார் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் வழியாக பசிலிகுட்டை செல்லும் சாலையில் பக்தர்கள் வழி நெடியிலும் அன்னதானம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பாலியல் வன்புணர்வு: குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

ABOUT THE AUTHOR

...view details