தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் பீப்-க்கு தடை; கவலை வேண்டாம்: விசிக இலவசமாக வழங்க முடிவு - பீப் பிரியாணிக்கு தடை

ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணி இடம் பெறாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளதால் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் அதனை இலவசமாக வழங்கி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளன.

பீப் பிரியாணி இலவசமாக வழங்க விசிக முடிவு
பீப் பிரியாணி இலவசமாக வழங்க விசிக முடிவு

By

Published : May 12, 2022, 4:46 PM IST

திருப்பத்தூர்: ஆம்பூர் வர்த்தக மையத்தில் மே 13, 14, 15 ஆகிய தேதிகளில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பிரியாணி திருவிழா நடைபெறவுள்ளது. இத்திருவிழாவில் கோழி பிரியாணி, ஆடு பிரியாணி மட்டுமே அனுமதிக்கப்படும் எனவும் மாட்டிறைச்சி பிரியாணி இடம் பெறாது என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணி இடம் பெறவில்லை என்றால் திருவிழா நடத்தப்படும் வளாகத்திற்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள், சில அமைப்புகள் சார்பில் மாட்டிறைச்சி பிரியாணியை இலவசமாக வழங்கி போராட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பீப் பிரியாணி இலவசமாக வழங்க விசிக முடிவு

இதற்காக 30-க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்டோர் ஆம்பூரில் உள்ள மாட்டிறைச்சி கடைகள் மற்றும் பிரியாணி கடைகளில் துண்டு பிரசுரங்கள் வழங்கி ஆதரவு திரட்டி வருகின்றனர். இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் ஆம்பூரில் பல டன் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால் மாட்டிறைச்சியை மாவட்ட நிர்வாகம் பிரியாணி திருவிழாவில் அனுமதிக்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:அதிமுக ஊராட்சித் தலைவி மீது திமுக நம்பிக்கை இல்லா தீர்மானம் - பறிபோனது பதவி!

ABOUT THE AUTHOR

...view details