திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூரில் இஸ்லாமியர்கள் அவரவர் வீடுகளில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடத்தினர். கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் ஈத்கா மைதானம், பள்ளிவாசல்கள் மூடிய நிலையில் உள்ளதால் அங்கு சிறப்பு தொழுகை நடைபெறவில்லை.
பக்ரீத் பண்டிகையையொட்டி வீடுகளில் சிறப்பு தொழுகை!
திருப்பத்தூர்: ஊரடங்கு காரணமாக பள்ளிவாசல்களில் தொழுகைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் இஸ்லாமியர்கள் ஒவ்வொருவரும் தங்களது குடும்பத்தாருடன் வீடுகளிலேயே சிறப்பு தொழுகை நடத்தினர்.
சிறப்பு தொழுகை
அதற்குப் பதிலாக அவரவர் வீடுகளில் அரசின் விதிகளைப் பின்பற்றி தொழுகை நடத்தினர். மேலும் ஊரடங்கு உத்தரவால் வேலையின்றி தவித்துவருவதால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், புத்தாடை வாங்க முடியாமல் பழைய ஆடைகளை அணிந்து பண்டிகையைக் கொண்டாடினர்.
இதையும் படிங்க:5 மாதங்களுக்கு பிறகு உற்பத்தியை தொடங்கியுள்ள பெரியாறு நீர் மின்நிலையம்!