திருப்பத்தூர் மாவட்டம் சங்கராபுரம் அருகே திருப்பத்தூர் - திருவண்ணாமலை பிரதான சாலையில் சின்னகண்ணாலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கரும்பு விவசாயியான முனிராஜ் தனக்கு சொந்தமான டிராக்டரில் ஓட்டுநர் உட்பட 11 பேருடன் சென்றுள்ளார்.
திருவண்ணாமலையிலிருந்து திருப்பத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி திரும்ப நினைத்து எதிர்பாராத விதமாக டிராக்டரின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது. டிராக்டரின் டிரெய்லரில் அமர்ந்திருந்த சிங்காரி (45), கௌரி (40) ஆகிய இரண்டு பெண் கூலி தொழிலாளிகள் உள்பட லாரி ஓட்டுநருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.