ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு 30 நாள்கள் சாதாரண சிறை விடுப்பு வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே 19ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்நிலையில் இன்று (மே.28) பேரறிவாளன் 30 நாள்கள் பரோலில் தனது சொந்த ஊருக்கு வந்தடைந்தார்.
இதுகுறித்து பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கூறுகையில், "நெருக்கடியான கரோனா காலக்கட்டத்தில் என்னுடைய வேண்டுகோளை ஏற்று, என் மகனின் நோய் எதிர்ப்பு சக்தியை கருத்தில் கொண்டு மருத்துவத் தேவைக்காக 30 நாள்கள் விடுப்பு வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி. இது என் மகனின் 30 ஆண்டுகாலப் போராட்டம் என்பது எல்லோருக்கும் தெரியும்.