தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அனுமதி அளிக்கப்படாத இடங்களில் பரப்புரையில் ஈடுபட்ட ஆம் ஆத்மி! - ஆம் ஆத்மி கட்சியினர் யாத்திரை

திருப்பத்தூர்: ஆம்பூரில் அனுமதி அளிக்கப்படாத இடங்களில் ஆம் ஆத்மி கட்சியினர் பரப்புரையில் ஈடுபட்டதால் காவல் துறையினர் அக்கட்சியினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆம் ஆத்மி போலீசார் வாக்குவாதம்
ஆம் ஆத்மி போலீசார் வாக்குவாதம்

By

Published : Dec 21, 2020, 4:30 PM IST

ஊழலை ஒழிக்கும் துடைப்பம் பேரணி

ஆம் ஆத்மி கட்சியின், ஊழலை ஒழிக்கும் துடைப்பம் பேரணி இன்று ஆம்பூர் வந்தது. வரும் சட்டப்பேரவை தேர்தலில், தமிழ்நாட்டில் ஊழல் இல்லாத ஆட்சியை அமைக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி சார்பில் கடந்த டிசம்பர் 13இல் சென்னையில் இருந்து, துடைப்பம் பேரணி தொடங்கியது. இந்தப் பேரணிக்கு அக்கட்சியின் மாநிலத் தலைவர் வசீகரன் தலைமையேற்றுள்ளார்.

ஆம்பூரில் பேரணி

மாநிலம் முழுவதும் செல்லும் பேரணியில், ஆம் ஆத்மி கட்சி மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்று வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதிக்கு வந்தபோது பைபாஸ் சாலையில் இருந்து ரயில் நிலையம் வரை அவர்களுக்கு யாத்திரைக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

ஆம் ஆத்மி போலீசார் வாக்குவாதம்

காவல் துறையினருடன் வாக்குவாதம்

இதனிடையே, அனுமதி அளிக்காத ஓ.ஏ.ஆர் திரையரங்கம், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் ஆம் ஆத்மி கட்சியினர் பரப்புரை செய்ய விரைந்தனர்.

இதனால் காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது அக்கட்சியின் மாநில தலைவர் வசீகரன் மற்றும் அக்கட்சியினர் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு சில மணி நேரம் பரபரப்பு நிலவியது.

இதையும் படிங்க: கார்த்திகை பொறந்தும் காலம் பொறக்கல... கலங்கும் மண்பாண்டத் தொழிலாளர்கள்

ABOUT THE AUTHOR

...view details