திருப்பத்தூர்:ஆம்பூர் பங்காரு சாமி தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ். அதே தெருவில் வெங்கடசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த மகேஷ் மற்றும் ராஜேஷ் என்ற சகோதரர்கள் குளிர்பான கிடங்கு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று ரமேஷின் வீட்டிற்கு உறவினர்கள் காரில் வந்த நிலையில் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குளிர்பான கிடங்கிற்குச் சொந்தமான ஆட்டோ இடையூறாக இருப்பதாகவும் அதை எடுக்குமாறு ரமேஷ் கூறியுள்ளார்.
இதனால் ரமேஷ் மற்றும் மகேஷிற்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த ரமேஷ் மட்டைப்பந்து மட்டையால் மகேஷை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகேஷ் கத்தியால் ரமேஷை குத்தியுள்ளார். மேலும், இதனைத் தடுக்க சென்ற ரமேஷின் மனைவியிற்கும் தலையில் காயம் ஏற்பட்டது.