திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியைச்சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவன் அனாஸ் அலி தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தாக அனாஸ் அலியை கடந்த 30.07.2022ஆம் தேதி மத்திய குற்றப்பிரிவு புலனாய்வுத்துறையினர் கைது செய்தனர்.
ஐஎஸ்ஐஎஸ் உடன் தொடர்பிலிருந்தாரா இளைஞர்? - மேலும் 15 நாள்கள் காவலுக்கு உத்தரவு இந்நிலையில் கல்லூரி மாணவன் ஒரு நாள் விசாரணைக்குப் பிறகு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கடந்த 5.11.2022ஆம் தேதி அனாஸ் அலி வீட்டில் திருப்பத்தூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான காவல் துறையினர் ஆய்வில் ஈடுபட்டனர்.
ஐஎஸ்ஐஎஸ் உடன் தொடர்பிலிருந்தாரா இளைஞர்? - மேலும் 15 நாள்கள் காவலுக்கு உத்தரவு இதனைத்தொடர்ந்து ஜாமீன் வேண்டிய கல்லூரி மாணவனின் உறவினர்கள் மனு அளித்திருந்த நிலையில் அம்மனுவின் மீதான விசாரணை இன்று (நவ.17) ஆம்பூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்நிலையில், அம்மனுவை விசாரித்த ஆம்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முருகன் இன்று முதல் மேலும் 15 நாட்களுக்கு 01.12.2022 வரை கல்லூரி மாணவன் அனாஸ் அலியை சிறையில் அடைக்க நீதிபதி முருகன் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கல்லூரி மாணவன் அனாஸ் அலி வீட்டில் காவல்துறை சோதனை