ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு கழிவறை அரங்கம் அமைத்துத் தரக்கோரி பள்ளியின் சார்பில் முன்னாள் மாணவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த நிலையில், 1998- 2000 ஆம் கல்வியாண்டில் படித்த முன்னாள் மாணவர்கள் 40 பேர் ஒன்றிணைந்து 6 .5 லட்சம் மதிப்பீட்டில் மாணவர்களுக்கான நவீன கழிவறை தங்களது சொந்த பணத்தில் கட்டி முடித்து அதனை மாணவர்கள் பயன்பாட்டிற்கு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர் .