எதிர் வரும் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பட்டியலை நேற்று (மார்ச்.10) அதிமுக தலைமை அறிவித்தது. இதில் வாணியம்பாடி தொகுதி வேட்பாளராக அமைச்சர் நிலோபர் கபில் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், அவருக்கு பதிலாக செந்தில் குமார் என்பவரை அதிமுக தலைமை அறிவித்தது.
இதனால் விரக்தியடைந்த தொண்டர்கள் சிலர் அமைச்சரது வீட்டின் முன்பு குவிந்தனர். "மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் சிறுபான்மையினப் பெண் ஒருவருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியை பறிப்பதா?" எனக் கேள்வி எழுப்பிய தொண்டர்கள், இம்முடிவை மறு பரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தினர்.
மேலும், அத்தொகுதியை மீண்டும் அமைச்சருக்கு வழங்காவிட்டால் வாணியம்பாடி நகரத்தில் உள்ள 22 கிளைச் செயலாளர்களும் ராஜினாமா செய்யவிருப்பதாகவும், ஒட்டுமொத்த சிறுபான்மை வாக்காளர்களும் அதிமுகவை புறக்கணிக்கவிருப்பதாகவும் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேட்பாளர் பட்டியலில் இடம்பெறாத அமைச்சர் நிலோபர் கபில்: தொண்டர்கள் கொந்தளிப்பு மேலும், "கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இஸ்லாமியர்கள் வாக்கு அதிமுகவுக்கு பதிவாகவில்லை எனக் குற்றஞ்சாட்டி, இந்த முறை சீட் ஒதுக்கவில்லை. அதே தேர்தலில் 39 தொகுதிகளில் தோல்வி அடைந்தவர்களுக்கு எதிராக அதிமுக தலைமை என்ன நடவடிக்கை எடுக்கும்" எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதையும் படிங்க:41 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு மறுப்பு!